காமுகுல குஞ்சடிகக் காப்பு ஒக்கலிகர் வரலாறு

சுமார் 10,000 வருடங்களுக்கு முன், தற்போதைய இந்தியாவின் வடபகுதியில் இமயமலைத்தொடருக்கும், விந்தியசாத்பூரா மலைத்தொடருக்கும் இடையே ஸ்டெத்தீஸ் என்ற கடல் கிழக்கு மேற்காக சுமார் 1300 மைல்கள் நீளத்தில் இருந்துள்ளது. ஸ்டெத்தீஸ் கடலுக்கு வடக்குப்பகுதி கொண்டவானா என்றும், கடலுக்குத் தென் பகுதியில் பாஞ்சியா என்ற நிலப்பகுதியும், அதற்குத் தெற்கு விந்தியசாத்பூரா மலைத்தொடர், கிழக்கு மேற்காக குஜராத்திலிருந்து, சத்தீஸ்கர், ஒரிஸா மாநிலங்கள் வரை நீண்டும், அன்றும், இன்றும் உள்ளது. இந்த மலைத்தொடருக்கும், ஸ்டெத்தீஸ் கடலுக்கும் இடையில் பாஞ்சியா என்ற பகுதியுடன், அதன் கிழக்காக சிறிது நிலப்பகுதியும் இருந்துள்ளது. அதுதான் இன்று பஞ்சாப், ஹரியானா, மத்தியப்பிரதேசத்தின் வடபகுதி, உத்திரப்பிரதேசத்தின் தென்பகுதியாகவும், வடபகுதியில் பீகார் மாநிலமும் இருந்துள்ளது.

இக்காலகட்டத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் கன்னியாகுமாரியிலிருந்து தெற்கில் லெமூரியாக்கண்டம் இருந்துள்ளது. அது தெற்கில் ஆஸ்திரேலியா வரையிலும், கிழக்கில் ஜாவா, சுமித்ரா தீவுகள் வரையுலும், மேற்கில் மடகாஸ்கர் தீவை உள்ளடக்கி ஆப்பிரிக்கா வரையிலும் இருந்துள்ளது. அக்கண்டம் இயற்கைப் பேரழிவால் அழிந்து, அழிக்கப்பட்ட பொருள்கள் வங்காளவிரிகுடா வழியாக எடுத்துச்சென்று ஸ்டெத்தீஸ் கடலை மூடியுள்ளது. (இதன் விளக்கம் காமுகுல குஞ்சடிக்காப்பு ஒக்கலிக்கர் வரலாற்றுப் புத்தகத்தில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.). அவ்வாறு மூடப்பட்ட செயலால், ஸ்டெத்தீஸ் கடல் பகுதி நிலப்பரப்பாக மாறி இன்று கங்கைச்சமவெளியாக உள்ளது. இதன் பின்தான் விந்தியசாத்பூரா மலைத்தொடரை எல்லையாக வைத்து வடஇந்தியா, தென்இந்தியா என் இருபிளவுகள் ஏற்பட்டுள்ளன. தென்இந்தியா திராவிடம் என்ற பெயரிலும், வடஇந்தியா புரட்டோஜெனிடிக் திராவிடம் எனவும் இருந்துள்ளது. அதாவது புரட்டோஜெனிடிக் திராவிடர்கள், திராவிட நாகாரிகத்தைப் பின்பற்றி வளர்ந்தவர்கள் என்று டாக்டர். புனிதத்தந்தை ஹெராஸ் மற்றும் டாக்டர் ஜான் மார்செல் என்பவர்கள் கூறியுள்ளனர். இவர் உலக மக்கள் வாழ்க்கையை கி.மு 2-ம், 3ம் நூற்றாண்டிலிருந்து ஆய்வு செய்து எழுதியுள்ளனர். அவர்கள் ஆங்கிலேயர் பொருள் உதவியுடன் செயல்பட்டவர்கள். பின்பு அவர்கள் ஆய்வு ஆங்கிலேயர்களுக்கு, மனோதத்துவ ரிதியில் பயன்பட்டது.

லெமூரியாக்கண்டம் அழிந்தபின், மீதி அழிவுக்கு உட்படாமல் இருந்தது குமரிக்கண்டமாகும். இதில் இலங்கையும் கன்னியாகுமரியுடன் சேர்ந்தே இருந்துள்ளது. இலங்கையை ஆண்டுவந்த இராவணன் ஒரு பெரும் சிவபக்தர். அவர் சிவனிடமிருந்து நிறைய அரிய, பெரிய வரங்களைப் பெற்றவர். குமரிக்கண்டம் கி.மு. 2-ம் நூற்றாண்டில் தொடக்கத்திலோ அல்லது கி.மு. 3-ம் நூற்றாண்டின் கடைசியிலோ அழிந்துள்ளது. அந்த அழிவுற்ற பொருள்களை கொடிய இயற்கை சூறாவளி, அரபிக்கடல் வழியாக எடுத்துச்சென்று, இராஜஸ்தானை மணலால் 150 அடிக்குக் கீழ், கடல்மட்டத்தில் சரஸ்வதிநதி என்ற நதி இன்றும் மண்ணோடு, மண்ணாகக் கசிந்து அரபிக்கடலில் சங்கமமாகிறது. இதையறிந்த, மைய அரசு 250 அடிவரை குழாய் அமைத்து அப் பகுதியில் மக்களைக் குடியேற்றுகிறது. நிறையத் தொழிற்சாலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகள்தான் இமயமலையில் உருவாகும் பெரிய நதிகள். பிரம்மபுத்திரா நதி, திபெத் வழியாகச்சென்று அஸ்ஸாம் வழியாகவும், கிழக்கு வங்காளம் வழியாகவும் வந்து வங்காளவிரிகுடாவில் சங்கமமாகிறது. சிந்து நதியானது ரவி, பியாஸ், சட்லெஜ் நதிகளுடன் சிந்துசமவெளியையும், ஸ்டெத்தீஸ் கடல் உயர்ந்ததால் கங்கைச் சமவெளியையும் உருவாக்கியுள்ளன. இந்து மதம், முதன்முதலில் சிந்துசமவெளியில்தான் சக்தி என்ற பெண் தெய்வத்தால் உருவாகியுள்ளது. பின் சத்தியை, ஆதிபராசக்தி என்றும் வழிபட்டனர். இலங்கேசுவரனான இராவணன் இக்காலத்தில்தான் தன் தவப்பயனால சிவபெருமானிடமிருந்து அரிய பெரிய வரங்களைப் பெற்றுள்ளார்.

சிவபெருமான், வெள்ளியங்கிரி மலையில் தவமிருந்த காலத்தில், காமதேனு சிவபெருமானின் தவ சக்தியாலும், அழகிலும் மயங்கிக் காமுகுலத்தவர் உருவானதும் 5100 வருடங்களுக்கு முந்தையது. (கலியுகத்திற்கு முந்தியது) துவாபரயுகம் ஆகும். வெள்ளியங்கிரி மலை இருந்தது வடமேற்கு இந்தியப்பகுதி. அது, லெமூரியாவின் அழிவுப்பொருள்களாலோ அல்லது குமரிக்கண்டத்தின் அழிவுப்பொருளாலோ, மூடப்பட்டபோது சிவபெருமான், இமயத்தின் உச்சியான கைலாயம் சென்றுவிட்டதாக தமிழ்நாடு , கம்பம் புதுப்பட்டியைச் சார்ந்த பேராசிரியர் ஆர். செல்லப்பா ஆய்வின் மூலம் அறிகிறோம். சிவபெருமான் ஒரு மகாரிஷி. எனவே இயற்கையின் தத்துவத்தையும், விதிமுறைகளையும் அறிந்தவர்.எதையும் அழிக்கவும்,ஆக்கவும் சக்தி படைத்தவர். எனவேதான் இலங்கை மன்னன் இராவணனுக்குப் பல வரங்களையும் கொடுத்தார். ஆனால் தர்மம், நீதி தவறும் பட்சத்தில் அழிக்கவும் செய்கிறார். மேலும் பல அவதாரங்களை எடுக்கும் சக்தியுடையவர். அவற்றில் நந்தீஸ்வரர் ஓர் அவதாரமாகும்.

காமுகுலம் தோன்றிய வரலாறு :-

வெள்ளியங்கிரி மலை இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் ஹாரிதுவாருக்கும், டெராடூனுக்கும் மேற்கில் இருந்திருந்திருக்க வேண்டும். அந்த மலையின் மேல் சிவபெருமான் தவமிருந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த அனைத்து உயிர் இனங்களும் அவர் தவசக்தியால் ஈர்க்கப்பட்டன. காமதேனு என்ற தெய்வீகப்பசுவும் அவருடைய தவத்தாலும், அழகாலும் ஈர்க்கப்பட்டு. உடல் சிலிர்க்க காமமுற்று, மடிப்பால் சுரந்து, தரையில் துளிகளாக விழுவதைத் தன் ஞானக்கண்களால் கண்ட சிவபெருமான், சிந்திய பால்துளிகளை மனிதர்களாகப் படைத்தார் என்பதும், அப்போது தெய்வலோகத்தின் விதிப்படியும், தர்மம் காக்கப்படவேண்டு மென்ற விதியின்படியும், தான் நந்தி அவதாரம் எடுத்து, அந்த மக்களைக் காத்து வந்தார் என்பது புராணம். இதை பூமியானது, சூரியனிடமிருந்து பிரிந்து வந்து, வெப்பம் தணிந்தபின், பூமியின் மேல் உயிர் ஜீவன்கள் உண்டான விதத்தையும், அந்த உயிர் ஜீவன்களின் தோற்றம், குணம், வாழ்க்கை முதலியவற்றைக் கற்றுத்தெரிந்தவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு தோன்றிய காமுகுலத்தவருக்கு ஒரு நாள், பெரும் சோதனை ஏற்பட்டது. வானத்தில் பயங்கரமான ஒளியும், அதனால் பயங்கர சப்தத்தையும் கேட்ட காமுகுலத்தவர் பயந்துபோய் தென்மேற்காக, வெள்ளியங்கிரி மலையிலிருந்து மலையடிவாரத்திற்கு இறங்கி வந்தனர். அங்கு சில காலம் ஜோதிவனத்தில் இருந்த ஜோதி மரத்தின் பாலைக் குடித்துச் சிறிது காலம் வாழ்ந்தனர். பின்னர் தங்கள் நிலையறிந்து , தங்களின் குலங்கோத்திரங்களையும், வாழ்க்கையின் நிலையையும் அறியும்படி, யோகி ஜானக்கல்வருடன், சிவனை முறையே வேண்டி வணங்கினர். அப்போது சிவன், நந்தீஸ்வரர் அவதாரத்துடன் காட்சி கொடுத்தார். காமுதேனுவும் வந்தார். யோகி ஜானக்கல்வருடன் மூவரும் சேர்ந்து சாமுத்திரிகா லட்சணப்படியும், செய்த தொழில்களை வைத்தும், மக்களை 48 குலங்களாகப் பிரித்தனர். பின்பு நந்தீஸ்வரனும், காமுதேனுவும், காமுகுலம் சிறப்புற வாழ்த்தி மறைந்தனர். அதன் பின், ஒரு நாள் காமுகுலத்தவர், அப்பக்கமாக யாதவ நாகக்கன்னியர் வந்ததைக் கண்டு, திருமண ஆசையை யோகி ஜானக்கல்வரிடம் கூறினர். அவரும் அருகில் துவாரகையை ஆண்ட கிருஷ்ணபரமாத்மாவிடம் சென்று இதைக் கூறினார். பின்னர் கிருஷ்ணபரமாத்மா சிவனிடம், ஞானத்தால் நினைத்து அனுமதி கேட்டுப்பெற்றார். பின்னர் காமுகுலத்தவர் அனைவரையும் துவாரகை அரண்மனைக்கு அழைத்து, திருமணத்திற்கு தகுதியாயிருந்த ஒன்பது பெண்களைக் காந்தர்வ் முறைப்படி ஒன்பது காமுகுலத்தவருக்கு முறைப்படி திருமணம் செய்து, சீர்சிரத்தையுடன், வெள்ளியங்கிரி மலையடிவராத்தில் காமுபுரம் என்ற ஊர் அமைத்து குடியமர்த்தினர். அந்த ஊர், குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களுக்குள் பொதுவான நிலத்தில் அமைந்திருந்தது. இந்த நிலையில் காமுகுலத்தவர் சுமார் 2500 ஆண்டுகள் அங்கு நிம்மதியுடன் வாழ்த்து, தங்களது வம்சத்தை விருத்திப்படுத்தினர்.

காமுகுலத்தவர் குஞ்சிடிகர்கள் எனப்பெயர் பெற்ற வரலாறு-

1. குறிஞ்சி நிலம் - மலையும், மலைச்சார்ந்த நிலமும் ஆகும்.வழிபடும் தெய்வம் - சிவன் , மிருகம்- மான், பறவை - மயில்

2. முல்லை நிலம் - மலைசார்ந்த காடுகளும், அதைத்தொடர்ந்த வனாந்தரமும் ஆகும். வழிபடும் தெய்வம் - வனத்தேவதை நாகம்மாதேவி, மிருகம் - கரடி, பறவை - கழுத்தில் வெள்ளையுள்ள கழுகு

3. மருத நிலம் - ஆற்றுப்பாசனம் உள்ள நீர்வளப்பகுதி. உதாரணம் - கங்கை சமவெளி. வழிபடும் தெய்வம் - சிவன் மற்றும் விஷ்ணு, மிருகம் - முதலை, பறவை - கொக்கு (நாரை).

4. நெய்தல் நிலம் - கடலும் கடல்சார்ந்த தரைப்பகுதியும் ஆகும் நிரந்தரமாக தெய்வம் - இந்திரன் , மிருகம்- சுறா, பறவை - நீர்காகம்

5. பாலை நிலம் - வறண்ட பாலைவனம் , வழிபடும் தெய்வம் - காளி , மிருகம் - ஒட்டகம், பறவை - புறா.

மேலே கண்டதுதான் பண்டையகாலத்தில் மனிதர்கள் வாழ்ந்த பகுதிகளும், வாழ்க்கை முறைகளும் ஆகும். இதில் காமுகுலத்தவர்கள் குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் முல்லை நிலத்தைச்சார்ந்த பெண்களைத் திருமணம் செய்தனர். வாழ்விடம் இருவருக்கும் பொதுவான நீர்வளம் அதிகமில்லாத மலையை நெருங்கிய காட்டுப்பகுதி. பண்டைக்கால முறைப்படி பெண்கள் திருமணமான பின் , கணவன் வம்சத்தையே சார்ந்தவர்களாகிறார்கள். எனவே குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த காமுகுலத்தவர், குஞ்சிடிகர் என்ற பெயர் பெற்றனர்.

இதேபோல் மருத நில மக்கள் நீர்வளமுள்ள கங்கைச் சமவெளியில் வாழ்ந்தனர். எனவே அவர்கள் கங்கடிகர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இன்றும் நீர்வளமுள்ள பகுதிகளையே வாழ்விடமாக்கிக் கொண்டுள்ளனர்.

ஒக்கலிகர் எனப் பெயர்வரக் காரணம்.

சுமார் கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன் உலகத்தில் வாழ்ந்த மனித இனத்தைப்பற்றி, ஆங்கில அரசின் பொருள் உதவியுடன் மக்கள் வாழ்க்கையை ஆராய்ந்த ஆங்கிலப் பெரியவர்கள் டாக்டர். புனிதத்தந்தை கெராஸ் மற்றும் டாக்டர். ஜான் மார்சல் ஆவார்கள். அவர்கள் ஆய்வு செய்த கருத்துகளை இணைத்து எழுதியவர் டாக்டர். வைரணபிள்ளை. ஆவார். அவர் எழுதிய நூலின் பெயர் உலக சரித்திரம். இதிலிருந்து நாம் அறிவது: விந்திய சாத்பூரா மலைக்குத் தெற்கில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். அதற்கு வடக்கில் , இமயம் வரை வாழ்ந்தவர்கள் புரட்டோஜெனிடிக் திராவிடர்கள், அதாவது மனிதப்பண்புகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை தெற்கில் வாழ்ந்த திராவிடர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு வாழ்வை வளர்த்துக் கொண்டவர்கள். எனவே தமிழ்மொழியின் ஆதிக்கம் ஒரு காலத்தில் வட இந்தியாவில் இருந்தது. அதற்கான ஆதாரங்களும் உலக சரித்திரம் என்ற புத்தகத்தில் உள்ளன. கண்ணகிக்குச் சிலைவடிக்க சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து தமிழகத்திற்கு கல் கொண்டு வந்ததாக சரித்திரம் உள்ளது.

வட இந்தியாவை முதல் முதலில் முழுக்க ஆண்டவர் சந்திரகுப்த மெளரியர். ஆண்ட காலம் கி.மு. 321 முதல் கி.மு 297 வரை. அவர் கிரேக்க நாட்டு இளவரசியை (செலூக்கஸ் நிக்கோடர் உறவு) திருமணம் செய்து டூகாண்டார். செலூக்கஸ் நிக்கோடர், அலெக்சாண்டரை சந்திரகுப்த மெளரியர் உதவி கொண்டு வென்றதால் இந்தத் திருமணம் நடந்தது. அப்போது வட நாட்டில் தேவ நாகரி மொழி மற்றும் பிரகிருத மொழி மட்டுமே பேசப்பட்டது. அவற்றிற்கு தூதுவராக நியமிக்கப்பட்டார். அவர்தான் (கி.மு 305-ல் இருந்து கி.மு 295 வரை) இந்தியாவில் கிராமப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வாழ்க்கையை 1. ஒக்கலிகர், 2. ஆலியார், 3. இதார்கள் (தற்போது ஆதார்) என கிரேக்க மொழியில் எழுதி அதை செலூக்கஸ் நிக்கோடருக்கு ( கிரேக்க நாட்டுக்கு ) அனுப்பினார்.

மெகஸ்தனிஸ் கிரேக்க மொழியில் எழுதியதன் பொருள்படி:

1.ஒக்கலிகர் : விவசாயிகள் ( நிலத்தை உழுது வாழ்ந்த அனைவரும் விவசாயிகள்.) இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட ஜாதியினர் இந்த விவசாயத்தொழிலைச் செய்பவர்களாக உள்ளனர்.

2. ஆலியார்கள் : வியாபாரிகள். இவர்கள் பல்வேறு வகையான வியாபாரத் தொழில் செய்பவர்கள் ( இன்று ஹைதராபாத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகம் இதற்கு சான்றாகும்.)

3. இதார்கள் (ஆதார்கள்) : இவர்கள் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாகவும், இரகசியமாகவும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள். அதற்கான ஆதாரங்களைப் பெற்றவர்கள். (இன்று அரசாங்கத்தின் உளவுப்பிரிவினரைக் குறிக்கும்)

குறிப்பு : ஒக்கலிகர் என்பது கிரேக்க மொழியில் விவசாயிகள். குறிஞ்சி நிலத்தை ( மலைசார்ந்த காட்டுப் பகுதியில் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்பவர்கள்.) இருப்பிடமாகக் கொண்டவர்கள் குறிஞ்சி நில மக்கள். அவர்கள்தாம் குஞ்சிடிகர்கள். கங்கைச் சமவெளியில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள்தாம் கெங்கடிகர்கள்.

மெகஸ்தனிஸ் கிரேக்க மொழியில் எழுதியதன் பொருள்படி:

இவர்கள் பூர்வீகத்தில் வாழ்ந்த இடத்தின் பெயர்கொண்டு குஞ்சடிக்காப்பு ஒக்கலிகர் என்றும் கெங்கடிக்காப்பு ஒக்கலிகர் என்றும் விவசாயமே வாழ்வு ஆதாரமாகக் கொண்டவர்கள் என்றும் அறிகிறோம். எனவே குஞ்சிடிக விவசாயிகள் வேறு. கங்கடிக விவசாயிகள் வேறு.

மராட்டிக்காப்பு மற்றும் பக்க நாடிக்காப்பு

இவர்கள் அனைவரும் விவசாயிகள் மற்றும் தான்ய வியாபாரிகள் ஆனால், மராட்டிக்காப்பு மக்கள் மகாராஷ்டிரத்திலும், பக்க நாடிக்காப்பு மக்கள் பீகார் மற்றும் வங்காளம் மாநிலங்களில் குடியேறிவிட்டனர்.

பெடகண்டிக்காப்பு

இவர்கள் கடல் சார்ந்தவர்கள். பல இடங்களுக்குச் சென்று மீன் பிடித்து வாழ்ந்தவர்கள்.

காப்பு என்ற அடைமொழி வந்த காரணம்

வட இந்தியாவை முதல் முதலில் முழுக்க ஆண்டவர் சந்திரகுப்த மெளரியர். ஆண்ட காலம் கி.மு 321 முதல் கி.மு 297 வரை. பின்பு அவர் மகன் பிந்துசாரர் கி.மு 298 முதல் கி.மு 273 வரை ஆண்டார். அதன் பின் அசோகர் கி.மு 273 முதல் கி.மு 232 வரை ஆண்டார். இவர்கள் காலத்தில் மக்கள் நிம்மதியுடன் வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர். இவர்கள் சிவன் பக்தர்கள். ஆனால் அசோகர் கலிங்க நாட்டுப் படையெடுப்பிற்கு பிறகு புத்த மதத்தைத் தழுவினார். பிறகு அதனை மக்களிடையே பரப்பத்தொடங்கினார். இதனால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. கடைசிவரை இவர் முயற்சி வெற்றி தரவில்லை. இந் நிலையில் அசோகர் மகன்களும் பதவிக்காக சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இவ்வாறு 15 ஆண்டுகள் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்த சூழ்நிலையை மேற்கத்திய நாடுகள் பயன்படுத்திக்கொண்டன. இந்து மதமா? புத்த மதமா? என்ற பெரும் குழப்பம் சமுதாயத்தில் ஏற்பட்டு உள் நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. கடைசி மெளரிய வம்ச அரசரான பிரிகரதாவைக் கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடித்த புஸ்யமித்ராசங்காவும் புத்த மதத்தை எதிர்த்தவர். அவர் ஆட்சி கி.மு 185 ல் இருந்து கி.மு 73 வரை இருந்தது. கன்வா வம்சத்தினர், சங்கா வம்சத்தவருக்கு அடிமைகளானவர்கள். தேவபுத்தி என்ற கடைசி சங்காவம்சத்து மன்னரைக் கொலைசெய்துவிட்டு கி.மு 73 முதல் கி.மு 28 வரை சுங்கா வம்சத்தவர் வட இந்தியாவை ஆளத் தொடங்கினார்கள். அசோகர் புத்த மதத்தைப் பரப்ப முயற்சிசெய்த காலத்திலிருந்து சங்கா வம்சத்தவர்கள், கன்வாவம்சத்து மன்னர்களையே கொலை செய்துவிட்டு, ஆட்சிசெய்துள்ளனர். இந்நிலை கி.மு 200-லிருந்தே விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மேற்கத்திய நாட்டு நாடோடி வம்சத்தவர்களான சாகாஸ், சைத்தியன்ஸ் மற்றும் பார்த்தியன்ஸ் வாழ்வாதாரத்திற்காக. சிந்துசமவெளி, வடமேற்கு இந்தியா( காமுகுலம்) , மற்றும் கங்கைச்சமவெளி(கங்கடிகர்) முதலானவற்றைக் கொள்ளையடித்தனர்; கொலை, கொடுமைகள் செய்தனர். இதன் பின் குஷான் வம்சத்தவர்கள் வந்து அதையே செய்தனர். ஆனால் கனிஷ்கர் என்பவர் கி.பி 78 குஷான் வம்சத்தின் முதல் அரசரானார். இதுவரை சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல், வட இந்தியாவில் வாழ்ந்த மக்களான 1. குஞ்சடிகர்கள், 2. கங்கடிகர்கள், 3. மராட்டியர்கள், 4. பக்க நாடிகர்கள், மற்றும் 5.பெடகண்டியர்கள் அனைவரும் அந்தந்தச் சமுதாய ஆண்கள், தங்கள் வலது கையில் வெள்ளியால் செய்யப்பட்ட வளையலாகிய காப்பினைச் சமுதாயத்தைக் காக்கும் அடையாளச் சின்னமாக வலதுகையில் போட்டுக்கொண்டனர். இவ்வாறு மக்களே அவரவர் சமுதாயத்தைக் காத்துக்கொள்ள வீரத்தின் அடையாளமாகக் காப்பைப் போட்டுக் கொண்டனர். அவ்வாறு போட்டுக்கொண்ட வட நாட்டுச் சமுதாயங்கள் 1. குஞ்சிடிக்காப்பு, (இமயமலை அடிவாரத்தில் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்தவர்கள் ) 2. கங்கெடிக்காப்பு (இந்தியாவின் கங்கை-யமுனை சமவெளியில் வாழ்ந்தவர்கள்), 3. மராட்டியக்காப்பு ( இந்தியாவின் குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்ட்ரம் பகுதியில் வாழ்ந்தவர்கள். அவர்கள் ஒன்றுபட்டதால் மராட்டியம், பின்பு மகாராஷ்ட்ரம் என ஆயிற்று), 4. பக்க நாடிக்காப்பு மற்றும் 5. பெடகண்டிக்காப்பு. (இவர்கள் இருவரும் வட இந்தியாவின் கிழக்குப்பகுதியில் வாழ்ந்த்தவர்கள். இவ்வாறு இருந்ததன் காரணமாகவே குரு நானக்(1469 - 1539 ) சீக்கிய வம்சமாகவே அதை உருவாக்கிக் காப்பு அணிவித்தார். இன்றும் , இதன் பொருளாக தெய்வங்களும் காப்புக்கட்டி வணங்குகிறோம். இது, வேறு சமுதாயத்தவர் இந்துக்கள் கோவில்களை இடித்தாலும், தெய்வங்களை எடுத்துச் சென்றதாலும், நம் தெய்வங்களைக் காக்கவும் தெய்வங்களைக் காக்கவும் தெய்வங்களிடம் நாம் முறையிடுவதையே குறிக்கிறது.

எனவே எதிரிகளை எதிர்த்து, தாங்கள் தங்கள் வம்சம் காக்க போட்டுக்கொண்ட அடையாளம்தான் காப்பு என்பது. இதைக் காமுகுலத்தவருக்குச் செய்து கொடுத்த வம்சத்தவரைத்தான் பெள்ளோரு என்கிறோம். பெள்ளோரு தொழில் வெள்ளியில் ஆபரணங்களை செய்து கொடுப்பதுதான். மேலும் இன்றும் குஞ்சிடிகர்கள் ஒவ்வொரு கோத்திரத்திலும் பெத்தகாப்பு ( குலப்பெரியவர்), கட்டியக்காரர் (காப்பு கட்டுவதால் வந்த பெயர்) என்று கூறுகின்றனர். மேலும், நாயக்கர்கள் (கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் காமுகுலகுஞ்சிடிகர்களுடன் வாழ்ந்து, தமிழ்நாடு வந்தவர்கள்). அவர்களும் குஞ்சிடிகர்களைப்போல் திருமணத்தில் பெண்ணுக்குத் தாலிகட்டாது சில ஊர்களில் வசிக்கின்றனர். அவர்கள், அவர்களுடைய குல தெய்வத்தைக் கும்பிட்ட பின், மஞ்சுவிரட்டுதலில் (மாடு விரட்டுதல்) காப்புக்கட்டி வம்சத்தவரை மஞ்சுவிரட்டுதலைத் தொடங்கிவைக்க அழைக்கிறார்கள். மேலும் , வயதானவர்கள் பழைய ஆச்சாரப்படி வெள்ளியில் செய்த காப்பை வலது கையில் போட்டிருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

எனவே காமுகுலகுஞ்சிடிக்காப்பு ஒக்கலிகர் என்பதுதான் குலத்தின்(வம்சத்தின்) சரியான பெயராகும் . ஒக்கலிகர் என்று மட்டுமே எனக்கூறுவது சரியாகாது. உதாரணமாக. திரு . நாராயணசுவாமி அவர்கள் தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் சங்கம் என்ற பெயரில் தமிழ்நாடு விவசாயிகளுக்கு நன்மை செய்ய முயற்சித்தார். ஆனால் அச்சங்கமே அழிந்தது போல ஆகிவிட்டது. மேலும் ஒக்கலிகர் என்றாலே விவசாயிகள். இதில் இந்தியாவில் விவசாயம் செய்கின்ற அனைத்து சமூகத்தைச் சார்ந்த விவசாயிகளையும் குறிக்கும். நாம் எந்த சமுதாயத்தைச்சார்ந்த விவசாயிகள் ? ஒவ்வொரு விவசாயிச் சமூகத்திலும் பண்பாடுகள், நாகரிகம் மற்றும் வாழ்க்கை நெறிமுறைகளில் பல மாற்றங்கள் உள்ளன. இந்திய விவசாயிகளிடமும் , இந்திய சமுதாயத்திடமும் ஒற்றுமையே இல்லை . அப்படி இருக்க . நாம் எப்படி நம் சந்ததியினத்தவரை நல்வழிப்படுத்தி, அவர்கள் வாழ்க்கையைச் செழிப்படையச்செய்ய முடியுமெனச் சிந்தித்துச் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்.

மேலும் காமுகுலத்தவருக்கு குஞ்சிடிக்காப்பு ஒக்கலிகர் எனப் பெயர் வரக்காரணமும் உள்ளது.9ம் நூற்றாண்டில் தஞ்சையைகத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட ஆதித்திய சோழன். கர்நாடகாவை ஆண்டுவந்த இராஷ்கூட மன்னர் 2ம் கிருஷ்ணரின் (1509 - 1530) மகளையும் , பின்பு சேர அரசன் மகனையும் திருமணம் செய்கிறார். இரண்டு மனைவியருக்கும் ஆண்குழந்தை இருந்தது. ஆனால் , சேரமன்னர் மகனுடைய மகனே மூத்தவராதலால் அவருக்கு பட்டம் கட்டப்பட்டது. இதனால் 2ம் கிருஷ்ணரின் மகளின் பேரன் கர்நாடகாவுக்குச் சென்று தாத்தாவின் இராஷ்ரகூட ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் தமிழகத்தில் பிறந்து சுமார் 20 ஆண்டுகள் வாழ்ந்தால் கர்நாடகம் மற்றும் இன்றைய தெலுங்கானாவில் தமிழ்மொழியையும், தமிழ் கலாச்சரத்தையும் கடைபிடித்தால் (1) கர்நாடகாவில் சிமோகா சிவன் கோவிலையும் , முரடீஸ்வரர் சிவன் கோவிலும் மற்றும் சுப்பிரமணிகோவிலும், அதில் வினாயகர் , சுப்ரமணியர் (முருகன்) கோவிலும் கட்டி வழிபடச் செய்துள்ளார். முருகன் தமிழகத்தின் குறிஞ்சி நிலக் கடவுள் என தமிழ் இலக்கியம் கூறுகிறது. அதுபோலத்தான் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்து வருகின்ற நம்மை குஞ்சிடிக் காப்பு ஒக்கலிகர் மற்றும் காப்பிலியர் என்ற பெயரை கர்நாடகத்திலும் , தெலுங்கானாவில் வைத்துள்ளனர். மேலும் மத்திய மா நில அரசுகளும் குஞ்சிடிகர் (கோவை) , ஒக்கலிகர் , காப்பிலியர் , மற்றும் கவுடர் என்பதை எல்லாம் பின்தாங்கிய பிரிவில் சேர்த்து அதற்குரிய அந்தஸ்த்தைக் கொடுத்து வருகின்றனர்.

தங்களை பற்றி

Scroll